உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், மண்ணெண்ணைக்கு இன்று தொடக்கம் மானிய உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய, நாட்டின் மின்சார வசதியற்ற அனைத்து வீடுகளுக்கும், மண்ணெண்ணய் மானியம் வழங்கப்படவுள்ளது.
நாட்டில் தற்போது 4 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், மின்வசதியற்ற நிலையில் காணப்படுவதாகவும், இவ்வனைத்து வீடுகளுக்கும், 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், மாதமொன்றுக்கு 200 ரூபா பெறுமதியான மண்ணெண்ணய் மானியம் வழங்குவதற்கு, சமூர்த்தி ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த மண்ணெண்ணய் நிவாரணத்தை விநியோகிக்கும் பணியில், அனைத்து பிரதேச செயலகங்களும், ஈடுபடுத்தப்படவுள்ளது. இதன் முதலாவது நடவடிக்கை இன்று ஆரம்பமாகும்.
இதன்படி கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களே நாட்டில் அதிகளவு மண்ணெண்ணயை பயன்படுத்தும் மாவட்டங்களாகும். இருப்பினும் தோட்டத் தொழிலாளர்களின் பெரும்பாலானோருக்கு தற்போது மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதால் அவர்களது மண்ணெண்ணய் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறாயினும் மண்ணெண்ணய் பயன்படுத்தும் அனைத்து குடும்பங்கள் மற்றும் மீனவர்களுக்கும் மண்ணெண்ணய் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தற்போது அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
நாட்டில் 21 ஆயிரத்து 551 சிறிய ரக மீன்பிடி படகுகள் உள்ளன. இவை, தினமும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவையாகும்.
மண்ணெண்ணய் நிவாரணம் வழங்கப்படுவதன் மூலம், விலையேற்றச் சுமையிலிருந்து இவர்கள் விடுபடுகின்றனர். களுவாஞ்சிக்குடி பிரதேச அபிவிருத்தி சபைக்கூட்டம் கருணா தலைமையில்.
No comments:
Post a Comment