Friday, February 3, 2012

ஈராக்கிற்கான இலங்கை தூதுவராலயத்தை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

ஈராக்கிற்கான இலங்கை தூதுவராலயத்தை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல் தொடர்பு பிரிவின் பணிப்பாளர் ஜெனரல் சரத் திசாநாயக தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஈராக்கில் நிலவிய அரசியல் பிரச்சினை மற்றும் யுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஈராக்கிற்கான இலங்கைத் தூதுவராலயத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு அரசியல் பிரச்சினை தற்போது இல்லை எனவும் நல்ல சூழ் நிலை காணப்படுகின்ற காரணத்தினாலும் மீண்டும் அந்நாட்டில் தூதுராலய அலுவலகத்தை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஈராக்கில் தூதுவர் அலுவலகத்தை விரைவாக திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அமைச்சர் ஒருவரை அந்நாட்டுக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment