Friday, February 10, 2012

சவேந்திர சில்வாவுக்கு எதிரான நியூயோர்க் நீதிமன்ற வழக்கு தள்ளுபடி

ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதி ரமேஷின் மனைவி வத்சலாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தளபதியாக விளங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடமிருந்து நஷ்ட ஈடுகோரி இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக கடந்த செப்டெம்பர் மாதம் சவேந்திர சில்வாவுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ராஜதந்திர பாதுகாப்பு உள்ளது எனவும் அவரை விசாரிக்க தமக்கு அதிகாரம் இல்லையெனவும் நியூயோர்க் மாவட்ட நீதிபதி ஜே.போல் ஒட்கென் நேற்றுமுன்தினம் புதன்கிழமை தெரிவித்து, இம்மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

No comments:

Post a Comment