ஜரோப்பாவிற்கு செல்வதற்காக ஆபிரிக்க நாடுகளில் சென்று தங்கியிருந்து மீண்டும் நாடு திரும்புபவர்களால் யாழ்ப்பாணத்தில் மலேரியா நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக யாழ்.பிராந்திய சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது.
ஜரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக ஆபிரிக்கா நாடுகளில் சென்று தங்கியிருந்து விட்டு மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களில் இதுவரையில் 4 பேருக்கு இதுவரையில் மலேரியா நோய் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களில் 4 பேரும் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் உடனடியாக நாடு திரும்பியதும் இரத்தப்பரிசோதனையை மேற்கொள்ளுமாறு யாழ்.பிராந்திய சேவைகள் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மலேரியா நோய் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்தாலும் முற்றாக கட்டுப்படுத்தப்பட்;ட நிலையில் இருக்கின்றது.
ஆயினும் மீண்டும் இவர்களால் மலேரியா நோய் தாக்கம் மக்களிடம் பரவுவதைத்தடுக்கும் நோக்கில் இவர்கள் தொடர்பாக உடனடியாக பொது மக்கள் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறு அவர்கள் அறிவித்துள்ளானர்.
No comments:
Post a Comment