மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி தம்பலவத்தை கிராமத்திலுள்ள தோட்டமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்றை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிராம மக்கள் வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்
ஒல்லிமடுவாள் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கணேசமூர்த்தி (வயது- 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment