நீர்கொழும்பு பஸ் டிப்போ ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு
இந்த மாத வேதனம் இதுவரை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு - பெரியமுல்லையில் அமைந்துள்ள பிரதான பஸ் டிப்போவைச் சேர்ந்த ஊழியபர்கள் நேற்று நண்பகல் முதல் பஸ்களை சேவையில் ஈடுபடாமல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
நீர்கொழும்பு, பிரதான பஸ் டிப்போவில் பணியாற்றும் சாரதிகள் , நடத்துனர்கள் , மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் என 300 இற்கும் மேற்பட்டவர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
இதன் காரணமாக 48 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஐந்து பஸ்கள் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படுபவை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவிக்கையில்,
எமது மாத சம்பளம் ஒவ்வொரு மாதமும் 8 ஆம் திகதி வழங்கப்பட வேண்டும் .ஆனால் இந்த மாத வேதனம் இதுவரை வழங்கப்படவில்லை . இதன் காரணமாக நாங்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 12 வருட காலமாகவே எமது வேதனம் குறித்த திகதியில் வழங்கப்படாமல் உள்ளது என்றனர் .
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment