சர்வதேச பல்கலைக்கழகங்களை தரப்படுத்தும் புதிய அறிக்கைக்கு இணங்க இலங்கை பல்கலைக்கழகங்களில் பாரிய வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளது இதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமே முன்னணியில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் தரப்படுத்தலுக்கு அமைய 6 ஆயிரத்திற்கு 382 ஆம் இடத்திலிருந்து 3 ஆயிரத்து 246 ஆம் இடத்தை எட்டியுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகம் தரப்படுத்தல் வரிசையில் 806 ஆவது இடத்தை பிடித்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகம் 2 ஆயிரத்து 220 ஆம் இடத்திலிருந்து ஆயிரத்து 754 ஆம் இடத்தை எட்டியுள்ளது. களனி, யாழ்ப்பாணம், இலங்கை திறந்த பல்கலைக்கழகமும் முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டில் உலகில் அதி சிறந்த 12 ஆயிரம் பல்கலைக்கழங்களில் உள்ளடங்காத ரஜரட்ட பல்கலைக்கழகமும் இவ்வாண்டில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment