பாணின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிப்பு
இன்று நல்லிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அனைத்து பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 450 கிராம் பாணின் புதிய விலை 55 ரூபாவாக உயர்கிறது.
எவ்வாறாயினும், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையுயர்வு தொடர்பாக இன்றைய தினம் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைலவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்துக்குள் அரசாங்கம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வராவிடின் பாணின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அனைத்து பேக்கரி உரிமையாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment