Monday, February 6, 2012

யாழ்ப்பாணத்தில் முதலாவது நீச்சல் தடாகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

பலவேறு திட்டங்கள் தொடர்பாக விசேட மாநாடு.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 17 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் தடாகத்தை திறந்து வைத்ததோடு பல்வேறு அபிவிருத்திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவினால் யாழ்.மத்திய கல்லூரியில் புதிய நீச்சல் தடாகம் ஒன்று அமைக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அமைக்கப்பட்ட இந்நீச்சல் தாடாகமானது 17 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது இந்நீச்சல் தடாகத்தை இன்றைய தினம் மதியம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் புதல்வர்களான யோசித ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே உள்ளிட்டவர்களும் வேம்படி மகளீர் உயர்தரப்பாடசாலை மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி மத்திய கல்லூரி சுண்டுக்குளி மகளீர் கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளின் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை இன்றைய தினம் சாவகச்சேரியில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆண்கள் நோயாளர்கள் விடுதி மற்றும் ஏனைய இரண்டு விடுதிகளையும் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.

அத்தோடு இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக அரச அதிகாரிகளுடன் சந்திப்பொன்றையும் நடாத்தியுள்ளார். குறிப்பாக எதிர்காலத்தில் மே;றகொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி இங்கு அரச அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.


நீச்சல் தடாகத்திறப்பு விழாவில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வும் கொழும்பு பாடசாலை மாணவிகளின் நீச்சல் சாகசங்களும் இடம்பெற்றன. என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.



No comments:

Post a Comment