Monday, February 20, 2012

நடிகை எஸ்.என் இலட்சுமி காலமானார்.

சுகயீனம் காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகை எஸ்.என.; இலட்சுமி தனது 80 வது வயதில் நேற்று நள்ளிரவு சென்னையில் காலமானார். இவர் மகா நதி, விருமாண்டி தேவர்மகன், உள்ளிட்ட 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். நாகேஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட நடிகர்களுக்கு தாயகவும் நடித்துள்ளார்.  இவரது பூதவுடல் சென்னை சாலி கிராமத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்திலுள்ள செல்லம் குடியில் இவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இவரது உறவினர்களும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com