இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 யுத்த விமானமொன்று புத்தளம் மாவட்டத்தின் தும்மலசூரிய பொலிஸ் பிரிவிலுள்ள ஹெவன பகுதியில் சற்றுமுன் வீழ்ந்துள்ளது. விமானம் வீழ்வதற்கு முன்னர் விமானத்திலிருந்து விமானி வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளார் என விமானப்படை பேச்சாளர் குறூக் கப்டன் அன்டி விஜேசூரிய தெரிவித்தார்.
ரஷ்ய தயாரிப்பான இவ்விமானம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு வழக்கமான பயிற்சிநடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விமானம் வீழ்ந்தமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் தொழில்நுட்ப கோளாறினால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment