ஆனால் கள்ள கரண்ட எடுத்தால் கடுமையான தண்டனையும் கிடைக்கும்.
வடக்கின் சகல பகுதிகளுக்கும் இந்த வருட இறுதிக்குள்ளாக தேசிய மின்சாரம் வழங்கப்படும் இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. சட்ட விரோதமாக யாராவது மின்சாரம் பெற்றால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்; வடமாகாண பிரதிப்பொது முகாமையாளர் காரியத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இந்த வருட இறுதிக்குள்ளாக வடக்கின் சகல பகுதிகளுக்கும் அரசாங்கம் மின்சார வசதிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இடம்பெயர்ந்து மீளக்குடியர்ந்த மக்களுக்கு விசேட சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களுக்கான மின்சார இணைப்புகள் இலவசமாகவே வழங்கப்படவுள்ளன.
இப்போது தேசிய மின்சாரம் பளை வரையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த வருடம் யாழ்;ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுவிடும். வடக்கின் மின் தேவையை பூர்த்தி செய்ய யாழ்ப்பாணத்தில் 24 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும் அதே போல் கிளிநொச்சியிலும் ஒரு மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும்.
தீவகத்தின் பகுதிகளுக்கும் சூரிய சக்தி மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக சட்டவிரோத மின்சார பாவனையை மக்கள் மேற்கொள்ளக் கூடாது அவ்வாறு சட்டவிரோத பாவனையை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான சட்டவிரோத நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தின் காலத்தில் பயங்கரவாதிகள் தேசிய மின்சாரத்தை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அரசாங்கம் மீண்டும் வடபகுதிக்கு தேசிய மின்சாரத்தை கொண்டு வந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment