வெளிநாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது
வெளிநாட்டு இராணுவ உயர் அதிகாரிகளும் வெளிநாட்டு பாதுகாப்பு அமைச்சுக்களின் ஆலோசகர்களும் அடங்கிய குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் செய்து யாழ்.நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளனர்.
பங்களா தேஷின் பாதுகாப்பு ஆலோசர் முஸ்டர் நசீர் ஈரான் இராணுவ அதிகாரி ரஷ்சிய வான் படை மற்றும் கடற்படை அதிகாரிகள் ஆகியோரே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளவர்களாவார்கள்
இவர்கள் நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதியைச் சந்தித்துக்கலந்துரையாடியதோடு ஊர்காவற்றுயில் முன்னாள் போராளிகளும் படையினரும் இணைந்து நடாத்தும் நண்டு வளர்ப்பு திட்டத்தை பார்வையிட்டனர்
மேலும் யாழ்.நகவிகாரை நல்லூர்.கந்தசுவாமி கோயிலுக்கும் யாழ்.பொது நூலகத்திற்கும் சென்று அதனைப்பார்வையிட்டதோடு யாழ்.கோட்டைக்கும் நேரில் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment