Thursday, February 23, 2012

சரத் பொன்சேகா ஓர் அரசியல் கைதி என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டதாம்

சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தி இலங்கையில் திரட்டப்பட்டு அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கையொப்பங்கள் கொண்ட மகஜருக்கு வெள்ளை மாளிகை பதிலளித்துள்ளது.

இதன்படி சரத் பொன்சேகா ஓர் அரசியல் கைதி என்பதனை உத்தியோகப் பூர்வமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை மற்றும் அவர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் நீதிக் கட்டமைப்பு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதென அமெரிக்காவின் ஜனநாயகம் தொடர்பான செயற்பிரிவின் மேலதிக செயலாளர் மைக்கல் எச்.பொஸ்னர் தெரிவித்துள்ளார்.

அந்த மகஜரில் கையொப்பமிட்டுள்ள 25 ஆயிரம் பொதுமக்களுக்கும் அமெரிக்கா நன்றியை தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கை மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான உரிமைக்கும் , தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிப்பதற்கும் இடமளிக்குமாறும்,சர்தேச சட்டதிட்டங்களுக்கு மதிபளிக்குமாறும் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com