Wednesday, February 8, 2012

அமெரிக்க அதிபர் பதவி; ஒபாமா செல்வாக்கு ஏறுமுகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி நடத்தப் பட்டு வரும் கருத்துக்கணிப்புகள் அமெரிக்காவில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் தற்போதைய அதிபர் ஒபாமாவை பின்னுக்குத் தள்ளி அதிக அளவிலான வாக்குகள் பெற்று வந்த குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி இறுதியாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பின்னடைவை சந்தித்துள்ளார்.


அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை கணிசமாக அதிகரித்தவர் என்ற வகையில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு ஏறுமுகம் கண்டுள்ளது.

குடியரசுக் கட்சி வேட்பாளர், மிட் ரோம்னியைக் காட்டிலும், 6 புள்ளிகள் அதிகமாக பெற்றுள்ளார் அதிபர் ஒபாமா.

No comments:

Post a Comment