குதிரைப்பந்தயம் தொடர்பாக இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (15) 7.30 மணியளவில் நீர்கொழும்பு சாந்த ஜோசப் வீதியில் உள்ள குதிரைப்பந்தயம் பிடிக்கும் முகவர் நிலையம் அருகில் இடம்பெற்றது.
பேர்னாட் என்ற 50 வயதுடைய நபரே சம்பவத்தில் மரணமானவராவார். .கொலை சம்பவம் தொடர்பாக விஸ்திரியன் மாவத்தையை சேர்ந்த நிசாந்த திலீப் உக்வத்த என்பவர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது , சம்பவத்தில இறந்தவரும் , சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரும் நண்பர்களாவர் .இருவரும் குறிப்பிட்ட குதிரைப்பந்தயம் பிடிக்கும் நிலையத்திற்கு அடிக்கடி செல்பவர்களாவர். அங்கு வைத்து இவர்கள் இருவரும் குதிரைப்பந்தயம் தொடர்பாக தர்க்கத்தில் ஈடுபடுவது வழக்கமாகும்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இருவருக்கும் இடையில் குதிரைப்பந்தயம் பிடிப்பது தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .இதனை அடுத்து ,சநதேக நபர் சிறிய கத்தி ஒன்றை எடுத்து பேர்னாட் என்பவரை குத்தியுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment