Sunday, February 26, 2012

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா முயற்சி - லக்பிம

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்க முயற்சித்து வருகின்றது என்று லக்பிம பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் இந்த முயற்சி வெற்றியளிக்காது. பெரும்பான்மை வாக்குகளினால் இந்த தீர்மானம் தொடர்பான பிரேரணையை இலங்கை அரசாங்கம் தோற்கடிக்கும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளினால் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் தொடர்பில், இலங்கைப் பிரதிநிதிகள் உறுப்பு நாடுகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன என லக்பிம பத்திரிகை செய்தி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான விவகாரத்தில் இந்தியா இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் விவகாரம் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment