நீர்கொழும்பு , கம்பஹா ஆழ்கடல் மீனவர்கள் இன்றும் கடலுக்குச் செல்லவில்லை
நீர்கொழும்பில் ஆழ்கடல் மீனவர்கள் இன்றைய தினமும் கடலுக்குச் செல்லாமல் விலகியிருக்கத் தீர்மானித்தனர்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் தமது சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் மீனவர்கள் கடலுக்குச் செல்லாது விலகியிருக்கப்போவதாக நீர்கொழும்பு ஆழ்கடல் மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜோசப் பீட்டர் பெர்னாண்டோ குறிப்பட்டார்.
இதேவேளை, தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடங்கிய யோசனைத் திட்டமொன்றை பிரதி அமைச்சர் சரண குணவர்தன மூலம் ஜனாதிபதிக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கம்பஹா மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜூட் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment