உள்ளுராட்சி சபை தேர்தலில் அரசை தோற்கடித்த அமைச்சர் டக்ளஸ்-பட்டதாரிகள் கடும் விசனம்
கடந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலின் போது அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக கள்ளர்களையும் குடிகாரர்களையும் அரசின் சார்பில் தேர்தலில் போட்டியிட வைத்து அரசாங்கத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதோல்வியடையச் செய்து விட்டதாக யாழ்.பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தமக்கான நியமனங்களை வழங்கக்கோரி யாழ்ப்பாணப்பட்டதாரிகள் இன்றைய தினம் வடமாகாண ஆளுநரையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சந்தித்தனர்.
இதன்போது அமைச்சர் கடந்த தேர்தலில் அரசாங்கத்தை நீங்கள் தெரிவு செய்யவில்லையென்றும் இதனால் தான் உங்களுக்கான நியமனங்கள் இழுத்தக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தபோதே பட்டதாரிகள் அமைச்சர் மீது மேற்கண்ட குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் கு றுக்கிட்ட வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தற்காலிகமாக உள்ள வெற்றிடங்களுக்கு உடனடியாக பட்டதாரிகளை நியமிக்க பணித்தார்..
இதன்போது கருத்து கூறிய பட்டதாரிகள் கடந்த காலத்ததேர்தலில் அரசின் சார்பில் போட்டியிட்ட ஈ,பி.டி.பி கள்ளர்களையும் காவாலிகளையும் குடிகாரர்களையும் மட்டுமே தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எவ்வாறு இவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று கேட்டனர்.
இதனை கேட்ட அமைச்சர் நான் தான் அவர்களுக்கு எல்லாம் தலைவன் நான் சொல்வதையே அவர்கள் செய்வார்கள் என்று கூறினார். இதனைக்கேட்ட அவர்கள் சிரித்துக்கொண்டே சென்றனர்.
0 comments :
Post a Comment