வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நேற்று மகா சிவராத்திரி விரதம் வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது நான்கு சாம பூசைகள் இடம்பெற்றதுடன் இலிங்கோற்பவருக்கு விசேட அபிஷேகமும் இடம்பெற்றதுடன் அடியார்கள் சிவலிங்கத்துக்கு தமது கைகளால் அபிஷேகம் செய்தனர். இது தொடர்பாக புகைப்படங்கள்
கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் மகா சிவராத்திரி விழா
கண்டி இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் மகா சிவராத்திரி தின விழா நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி இந்திய உதவித் தூதுவராலயத்தின் தூதுவர் எ. நடராஜனுக்கு கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இரா. பாஸ்கரன் பொன்னாடைபோர்த்தி கௌவிப்பதையும், மற்றும் இந்து சமயத்திற்கு அரும்பணியாற்றி வரும் பெருந்தகைகளான பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் வ. மகேஸ்வரன், மத்திய மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் பீ. எஸ். சதீஸ், கண்டி இந்து சிரேஷ;ட வித்தியாலய அதிபர் செ. தியாகராஜன், கண்டி வர்த்தக சங்கத் தலைவர் செ. பிரேம் ராஜ்குமார் மற்றும் மு.சுந்திரமூர்த்தி, க. கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதையும், அறநெறிப் பாடசாலை மாணவி ஒருவருக்கு அதிதி பரிசு வழங்குவதையும் படங்களில் காணலாம் .
மாவத்தகம முத்துமாரியம்மன் கோயில் மாகா சிவராத்திரி பூசை
மாவத்தகம ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா சிவராத்திரி விசேட பூசை நடைபெற்றது. இந்நிகழ்வு கோவிலின் பிரதான குரு ஸ்ரீ சண்முகம் சுந்திரம் சுவாமி ஜீயின் தலைமையில் நடைபெற்றது இதில் பெருந்தொகையான அடியார்கள் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் மாகா சிவராத்திரி
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆதரவில் குருநாகல் ஸ்ரீ கதிரேசன் கோவில் மகா சிவராத்திரி விசேட வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கலாபூசணம் கலாநிதி குமாரசுவாமி சோமசுந்திரம், கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன், வைத்தியகலாநிதி ஆ, சி. சிவசோதி, எஸ். மனோகரன், கோவில் நிர்வாக சபைத் தலைவர் க. கந்தசாமி, செயலாளர் க. இராசரத்தினம் ஆகியோரையும் பூசை நிகழ்வுவையும் கலந்து கொண்ட அடியார்களையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment