முஸ்லிம் நாடான மாலத்தீவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் புரட்சி வெடித்தது. அதையடுத்து அதிபராக இருந்த முகமது நஷீத் பதவி விலகினார். புதிய அதிபராக வாகீத் ஹசன் பொறுப்பு ஏற்றார். நஷித் பதவி விலகுவதற்கு முன்பு ஒரு வாரமாக போராட்டம் நடந்தது. அப்போது நடந்த வன்முறை சம்பவங்களின் போது தலைநகர் மாலேவில் உள்ள அருங்காட்சியகம் (மியூசியம்) மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, அது உடனடியாக மூடப்பட்டது.
தற்போது அங்கு அமைதி திரும்பிய நிலையில் நேற்று மீண்டும் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் மற்றும் இந்து கடவுள்களின் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டு சேதம் அடைந்து கிடந்தன. அதுபோன்று 35 சிலைகள் சின்னாபின்னாமாகி இருந்தன. அவை அனைத்தும் மணல், பவளம் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட அறிய வகை சிலைகளாகும்.
இங்கு கடந்த 1962-ம் ஆண்டு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அன்று முதல் இந்த சிலைகள் இங்கு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமாக்கப்பட்டு விட்டன. அவை 6-ம் நூற்றாண்டு சிற்பங்களாகும்.
புரட்சியின் போது பழமை மதவாதிகள் இவற்றை உடைத்து நொறுக்கியதாக அருங்காட்சியக இயக்குனர் அலி வாகித் தெரிவித்தார். தெற்காசிய மாநாட்டின் போது முஸ்லிம் நாடான பாகிஸ்தான் மாலத்தீவு அதிபரிடம் அரிய புத்தர் சிலை ஒன்றை பரிசளித்து இருந்தது.
புத்தசிலை உடைக்கப்பட்ட செய்தி அறிந்து குதுகலித்திருந்த புலி ஆதரவு இணையத்தளங்கள், தற்போது இந்து சிலைகளை உடைக்கப்பட்ட செய்தியை இருட்டடிப்பு செய்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
இதேநேரம் பதவி விலகியுள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் தானாக முன் வந்து அதிபர் பதவியில் இருந்து விலகவில்லை என்னை கொல்ல ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சதி திட்டம் தீட்டினர். என் உயிரை காப்பாற்றி கொள்ளவே பதவி விலக வேண்டியது சூழ்நிலை ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
முகமது வாகீத் ஹசன் பதவி விலக கோரியும், உடனடியாக அதிபர் தேர்தல் நடத்த கோரியும் மாலேவில் முகமது நஷீத் நேற்று பேரணி நடத்தினார். அதில் அவரது மால் டிவியின் ஜனநாயக கட்சியை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்தியில் பேசிய நஷீத் இந்த தகவலை தெரிவித்தார். அப்போது துரோகிகளின் கையில் என் நாட்டு மக்களை ஒப்படைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்றார். மேலும் உடனே தேர்தல் நடத்தும் வரை பொதுமக்கள் ஓயக்கூடாது. அரசை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment