கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக கலாநிதி கிட்ணர் கோவிந்த ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த கலாநிதி கே. கோவிந்தராஜா கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரியாவார். இவர் இப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட கணித பிரிவில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக கனடாவிற்குச் சென்று வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பல்கலைக்கழக பேரவை இவர் உட்பட மூவரது பெயர்களை உபவேந்தர் பதவிக்காக சிபாரிசு செய்திருந்தது. கலாநிதி கே. கோவிந்தராஜா பேரவையில் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதில் உபவேந்தராக கடந்த இரண்டு வருட காலமாக கலாநிதி கே. பிறேம்குமார் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் தகுதிவாய்ந்த அதிகாரியாக கடமையாற்றிய பேராசியர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பதவிக் காலம் முடிவுற்றது.
எனினும் அவர் உபவேந்தருக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக மீள்நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பதில் உபவேந்தர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
No comments:
Post a Comment