இலங்கைக்கெதிரான யோசனையை அமெரிக்கா இன்று மனித உரிமை பேரவையில் சமர்பிக்க தீர்மானம்
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனையை இன்று (28) ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது எனவும், இந்த யோசனையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் “திவயின” பத்திரிகை நேற்று (27) தெரிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட 37 அரச சார்ப்பற்ற நிறுவனங்கள், இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வழங்கும் நோக்கில், ஜெனிவாவுக்கு சென்றுள்ளனர். இதனை தவிர தென்னாப்பிரிக்க முன்னாள் பேராயர் டெஸ்மன் டுடு, முன்னாள் அயர்லாந்து ஜனாதிபதி மேரி ரொபின்சன் ஆகியோரும், மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளனர் என்றும் “திவயின” பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த யோசனை மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
0 comments :
Post a Comment