Wednesday, February 22, 2012

முஷாரபைக் கைது செய்ய இன்டர்போல் உதவி!

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரபைக் கைது செய்ய இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று கொல்லப்பட்டார். இந்தச் சம்பவரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் அருகில் நடைபெற்றது.

பெனாசிர் பூட்டோவுக்கு போதுமான பாதுகாப்பு தரவில்லை என்ற காரணத்தினால் முன்னாள் அதிபர் முஷாரபைக் கைது செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இண்டர்போலின் உதவியை நாட இருப்பதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

இண்டர்போல் இதற்கு சம்மதித்தால் முஷாரபை கைது செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பும் அதிகாரம் அதற்கு இருப்பதாக சட்ட வல்லுனர் ஹஷ்மத் ஹபீப் கூறியுள்ளார். தற்போது முஷாரப் லண்டனில் வசித்து வருகிறார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com