Tuesday, February 21, 2012

இலங்கைக்கலாசாரப்படி பாசிக்குடாவில் திருமணம் செய்துகொண்ட ரஷ்ய நாட்டுக் காதலர்கள்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதி சூழலில் உல்லாசப்பயணிகளாக இலங்கைக்கு வந்த ரஷ்யநாட்டுக்காதலர்கள் இலங்கை கலாசாரப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று அண்மையில் பாசிக்குடாவில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்த இந்த ரஷ்ய நாட்டு இளம் காதலர்கள், இலங்கை விவாக பதிவு சட்டத்தின் கீழ், மட்டக்களப்பு பாசிக்குடா மாளு மாளு சுற்றுலா விடுதியில் திருமண பந்தத்தில் இணைத்துக்கொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முகாமைத்துவ பணிபர்பாளர் ரூமி ஜவ்பரின் வேண்டுகோளில், பாசிக்குடா வாளு மாளு சுற்றுலா விடுதி நிர்வாகம் திருணமத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தது.

ரஷ்யாவை சேர்ந்த 26 வயதுடைய ஒல்கா யுரேவ்னா ஹொபச்ரவும், அவரது 26 வயது காதலியான விளேடிமீர் எலக்ஸான்டிரிச், இந்துஹா கொரிசியும், ஆகியோரே இலங்கை ஜனநாயக குடியரசின் விவாக சட்டப்படி, வாழைச்சேனை பிறப்பு இறப்பு பதிவாளர் திருமதி ஆர். யோகராசா முன்னிலையில் பதிவு புத்தகத்தில் ஒப்பமிட்டு, திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

காலை பௌத்த மரபு படியும், மதியம் இந்து கலாசார முறைப்படியும், இவர்களது திருமணம் இடம்பெற்றது.

இரம்மியமான பசுமை நிறைந்த இலங்கையில், நாம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டமை, பெரும் பாக்கியமென, புதுமண தம்பதிகள் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment