மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளம் ஊத்தோடை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மதவாச்சி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவரும் பொலநறுவை பகுதியைச் சேர்ந்தவரும் ஓமடியாமடுவை சேர்ந்த நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவர்கள் வாழைச்சேனை பதில் நீதிவான் {ஹசைன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment