முல்லைத்தீவு கரைதுரைப்பற்றில் 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் நாளை மறுதினம் 24ம்திகதி மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் கொக்குத்தொடுவாய் வடக்கு கொக்குத்தொடுவாய் மத்தி கொக்குத் தொடுவாய் கிழக்கு கொக்குத்தொடுவாய் மேற்கு கருநாட்டுக்கேணி மற்றும் கருநாட்டுக்கேணி மத்தி ஆகிய 6 கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.
இவர்கள் 24ம் திகதி காலை 9 மணிக்கு மீளக்குடியேறுவதற்கான ஆவணங்களுடன் செம்மலை வித்தியாலயதத்திற்கு வருகை தருமாறும் மக்கள் தமது பதிவுகளை பிரதேச செயலரிடம் மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment