கடந்த வருடம் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதன் பிரகாரம் இன்று 21 ஆம் திகதியின் பின்னர் கிடைக்கும் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.
பல்கலைகழக பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்பட்டவையாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமாகும். பல்கலைக்கழக பிரவேசம் தொடர்பான விபரங்கள் அடங்கிய கையேடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலோ அல்லது அவ்வாணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள முகவர் நிலையங்களிலோ பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 40 ஆயிரம் பேர் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment