தனியார் பஸ்களுக்கு இன்று முதல் எரிபொருள் மானியம் வழங்கப்படும் என தனியார் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.தனியார் பஸ்களின் குறுந்தூர பயணத்திற்காக நாளொன்றுக்கு 50 லீட்டர் எரிபொருளையும், நீண்ட தூர பயணத்திற்காக தனியார் பஸ்களுக்கு நாளொன்றிற்கு 80 லீட்டர் எரிபொருளை மானியமான பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் தனியார் போக்குவரத்து அமைச்சர் சி்.பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வேன்கள், வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கும் இந்த மானிய உதவி வழங்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே பாடசாலை சேவையில் ஈடுபடும் வேன்கள், வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் ஆகியவற்றிற்கு மானிய உதவி வழங்கப்படும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment