பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எல்லை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதில் ஏராளமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சுமார் 7000 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் பிடித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள காஸா முனை பகுதிக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நேற்று சென்றார்.
அப்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களின் உறவினர்கள் ஏராளமானோர் காஸா முனையில் திரண்டிருந்தனர். பா பான் கி மூன் சென்ற வாகனங்களை வழிமறித்து கோஷம் எழுப்பினர். திடீரென சிலர் அவரது கார் மீது செருப்பு வீசி ஆவேசமாக கோஷம் போட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக ஐ.நா. செயல்பட்டது போதும், பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.
பான் கி மூன் வாகனம் தொடர்ந்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஹமாஸ் பாதுகாப்பு படையினர், போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின் தனது பயணத்தை தொடர்ந்தார் பான் கி மூன்.
No comments:
Post a Comment