Monday, February 27, 2012

ஐ.நா விற்கு எதிராக கருணா தலைமையில் மட்டுநகர் எங்கும் பெரும் ஆர்ப்பாட்டங்கள்.

இரண்டாம் இணைப்பு வீடியோ

ஜெனீவாவில் இன்று 27 திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் பகீரத பிரயத்தனத்தில் கொண்டுவரப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடகிழக்கு உட்பட நாடு பூராகவுமுள்ள 50 க்கு மேற்பட்ட பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் , அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐ.நா வின் செயலாளர் நாயக்கம் பான் கீ மூன் ஆகியோரது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பகுதிகளில் ஹர்த்தாலுடன் கூடிய மாபெரும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. மட்டு நகர்ப்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் முரளிதரன் தலைமை தாங்கினார். இவ்வார்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான ஆhப்பாட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மாவட்ட செயலாளரிடம் தூதுவர்கள், அதிகாரிகளுக்கு வழங்குவதற்கான மகஜர்கள் அமைச்சர் மற்றும் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டன.
 
இதனைத்தொடர்ந்து இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர்,
 
இந்த நாட்டை குழப்புகின்ற நோக்கோடு சில எதிர்ப்பான தீர்மானங்களை கொண்டுவருவதற்கு திட்டமிட்டிருக்கின்றார்கள். எமது நாடும் நாட்டு மக்களும் ஐ.நா சபைக்கு எதிரானவர்களல்லர். நாங்கள் அதிலே அங்கம் வகிக்கின்ற ஒரு நாடாக இருக்கின்றோம். அவர்களின் சட்டதிட்டங்களுக்க இணங்கவே எமது நாடும் நாட்டு மக்களும் செயற்பட்டு வருகின்றார்கள்.
 
அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். ஐ.நா சபைத் தலைவர் பான்கீமூன் அவர்களுக்கு எங்களுடைய மகஜர்களை மக்கள் சார்பாக இன்று கையளித்திருக்கின்றோம்.
 
30வருட யுத்தத்திற்குப் பின் நாங்கள் எல்லோரும் அமைதியாக வாழ்ந்து வருகின்றோம். இந்த அமைதி நிலைத்து நிற்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகும்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் கலந்து கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் நாட்டில் இன்று அபிவிருத்திகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கில் பல அபிவிருத்தித்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த அபிவிருத்திகள் தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். தற்போது இருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை பலப்படுத்துகின்ற நோக்கோடு இக் கூட்டத்தில் நாங்கள் அனைவரும் கலந்துகொண்டிருக்கின்றோம்.
 
இன்று நாங்கள் அனைவரும் சேர்ந்து எமது மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றோம். எதிர்காலத்தில் அனைத்து மக்களும் இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபட வேண்டும். அதற்கான வேண்டுகோளை நான் அவர்களிடம் விடுக்கின்றேன்.
 
உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை என் சார்பாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றேன். இன மத பேதமின்றி தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்கள் அனைவரும் இன்று ஒன்றாகச் சேர்ந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டு  தெரிவித்துள்ளோம்.












இதேநேரம் மட்டக்களப்பு - வந்தாறுமூலை, சித்தாண்டி, மாவடிவேம்பு பிரதேசங்களில் இடம்பெற்ற ஆர் ப்பாட்டத்திற்கு கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபாலா தலைமைதாங்கினார் இங்கும் பெரும்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதை படங்களில் காண்கின்றீர்கள்






No comments:

Post a Comment