வணக்கம் வணக்கம் பெடியளுக்கு இப்ப இந்த ஊர்கிழவன்ர கதையென்டாள் ஒரே புழுகம் என்று தான் வெளியில சொல்லிக்கேட்விப்பட்டேன் ஏனெண்டாள் பாருங்கோ உந்த ஊரில நடக்கிற நடந்த எல்லா விஷயத்தையும் இந்த கிழவன் சொல்லிபுடுவான் பாருங்கோ அது தான் உவங்கள் என்னைத் தேடிக்கொண்டு திரிய காரணமெண்டு சொல்லுறாங்க..
சரி சரி இண்டைக்கு நான் சொல்ல வந்த கதையை நான் மறந்து போடுவன் பாருங்கோ... உந்த கூத்தமைப்புக்காரரின்ர கதைகள் நாளுக்கு நாள் என்ர காதுக்கு வந்து சேந்திடுது பாருங்கோ அதுவும் இன்டைணக்கு உந்த கூத்தமைப்பில உள்ள ஒரு கட்சியான தமிழ் அரசுக்கட்சியின்ர செயலாளரும் கூத்தமைப்பின்ர ஒரு கூத்தாளருமான மாவை சேனாதிராசா பற்றி உந்த நல்லூர் பிரதேச செயலகத்தில வேலைசெய்யுறு ஒரு பெடியன் ஒரு கதை சொன்னான் பாருங்கோ உங்களுக்கு கூட அதைக்கேட்டா சோக்காகிடும் பாருங்கோ..
நாறிப்போயிருந்த உந்த திருநெல்வேலி சந்தையை எங்கட அரசாங்கம் தன்ர காசில பாவம் உந்த கொக்குவில் புறச்சனம் எண்டு நல்ல படியா ஒரு மாடிக்கட்டிடமாக மாத்தி கட்டிக்கொடுத்தது. ஆனால் அதைத்திறந்து வைக்க உந்த கூத்தளார் மாவையும் யாழ்ப்பாணத்தில இருக்கிற உந்த அரசாங்க அமைச்சர் டக்ளசும் தான் அழைக்கப்பட்டனராம்.
உதிலும் என்ன புதினம் எண்டால் நல்லூர் பிரதேச சபை உப்ப உந்த கூத்தமைப்பின்ர ஒரு கிழட்டு ஜி எஸ்சின்ர கையில தான் இருக்கு உந்த சனங்களும் பாருங்கோ சில நேரம் என்ன செய்யுறுது எண்டு தெரியாமல் செய்து போடுதுகள் பாருங்கோ அதால தான் உந்த கிழவன் உங்க வந்து தலைவராக இருக்கிறான்.
உவன் பாவி உங்க ஒரு கோதாரியும் இண்டைக்கு வரைக்கும் சனத்திற்கு செய்யல எண்டு ஒட்டுப் போட்டசனம் திட்டிக்கொண்டு திரியுறது உங்களுக்கு வேணுமெண்டால் தெரியாமல் போகலாம் ஆனால் இந்ந கிழவனுட்ட உந்த பருப்பு வேகாது பாருங்கோ எப்படியாச்சும் என்ர காதுக்கு வந்திடும் சரி உவன்ர கதையை விடுங்கோ...
அரசாங்கம் கட்டிக்கொடுத்த உந்த கட்டிடத்திறப்பு விழாவிற்கு வந்தால் திறந்து விட்டுக்போக வேண்டியது தானே அதை விட்டுட்டு உந்த இடத்தில அரசியல் பேசினமாம் அதுவும் உந்த டக்ளசும் இருக்கேக்க உதை சொன்னால் தான் ஏமாந்த சனம் போய் நாளைக்கு ஊர்ல இருக்கிறவங்களுக்கு சொல்லும் எண்ட குருட்டு நம்பிக்கையில வாயில வந்ததெல்லாம் அள்ளி விட்டான் உவன் பாவி மாவை.
கடவுளுக்கே பொறுக்காது உவன் பேசினது நாங்கள் ஒரு தனி இனம் தேசியம் இந்த அரசு எங்களுக்கு ஒண்டும் செய்யாது அது இது எண்டு அள்ளி விசுக்கிக்கொண்டு போன்னான் பாருங்கோ. உதெல்லாத்தையும் எங்கட அரசாங்க அமைச்சர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாராம் எண்டு வேற கதை அடிபடுது.
உண்மையிலேயே உவன் உதையெல்லாம் பேசும் போது இந்த கட்டிடம் அரசாங்கத்தினால் தான் கட்டப்பட்டதெண்டு சொல்ல யாருக்கும் தைரியம் இல்லையெண்டால் பாருங்கோ எங்க ஆட்களின்ர வலு என்னவெண்டு. அரசாங்கம் கட்டின ஒரு கட்டிடத்தை திறக்க வந்திட்டு அதில் நிண்டு உவனுக்கு உந்த கதை தேவை தானா? சொல்லுங்கோ அதுவும் அரசாங்கம் ஒண்டுமே செய்வதில்லையாம். என்ன கதைக்கிறான் ம்ம்..
அரசாங்கத்தை நம்பி சனங்களிட்ட 28 ஆயிரம் ஒட்டு வேண்டு வென்ட அரசாங்க அமைச்சர் உவன்ர கதையெல்லாம் கேட்டுக்கொண்டு சத்தம் போடாமல் இருந்தார் எண்டால் உது தமிழ் தேசியக் கூத்தமைப்பினருக்கு சார்பான செயற்பாடு எண்டு சொல்லாமல் எப்படி சொல்வதெண்டு எனக்கு தெரியல பாருங்கோ. உந்த அமைச்சர் ஒரு கதை சொல்லியிருந்தால் உவன்ர முகத்திரை அண்டைக்கு கிளிக்கப்பட்டிருக்குமு; தானே பாருங்கோ.
உவனையெல்லாம் உப்படியான நிகழ்விற்கு கூப்பிட்டால் அங்க ஒரு மூலையில் இருந்திட்டு தேத்தண்ணியும் கேக்கும் கொடுத்து அனுப்பி விட்டிருக்கலாம் தானே அதையும் எங்கட ஆக்கள் செய்யல பாருங்கோ.
சரி உதைல்லாத்தையும் எங்கட சனம் ஒருக்கா நினைச்சு பாக்கவேணும் பாருங்கோ அரசியல்வாதிகள் தங்கட சுயலாபத்திற்காக எதை வேணுமெண்டாலும் செய்வாங்க என்பதை ஒருத்தரும் மறக்க கூடாது. குறிப்பாக உந்த கூத்தமைப்பினரின்ர ஒரு பிள்ளையாவது இஞ்ச இருக்கா எண்டு ஒருக்கா சிந்தித்து பாருங்கே உவங்கள் உங்களை வைச்சு நாளுக்கு நாள் உசுப்பேத்தி உங்களை கிண்டி விட்டு அதில் குளிர் காய்ந்து கொள்ள விரும்புகின்றாங்கள்.
தங்கட பிள்ளைகளை சுவிசிலும் அமொகக்காவிலும் அவுஸ்ரேலியாவிலும் கொண்டுபோய் படிப்பீக்கினமாம்.
உங்களுக்கு தெரியாத இன்னொரு ஒரு கதையையும் நான் உங்களுக்கு சொல்லுறன் கேளுங்கோ... போன பாராளுமன்ற தேர்தலில்ல உந்த மாவையின்ர நெருங்கிய ஒரு சொந்தக்கார பெடியன் சண்டிப்பாயில உவனுக்காக பிரச்சாரம் செய்தான். உடனே அவனை கூப்பிட்டு உனக்கு என்ன விசராடா? ஒழுங்கு மரியாதையாக பேசாமல் இரு உந்த முட்டாள் சனததை உசுப்பேத்தி நாலு அறிக்கையை உந்த பேப்பர்களுக்கு விட்டால் கண்ணை முடிக்கொண்டு வீட்டில கீறுவாங்க, இதுக்கேன் விளம்பரம் என்று பணத்தை வீணடிக்கிறே , உனக்கு விசரே எண்டு உவன் பாவி கேட்டானாம்.
நீங்க வீட்டுக்கு கீறினதால தான் இண்டைக்கு நீங்க வீட்டில நிம்மதியாக வாழ முடியாமல் இருக்கிறீங்க எண்டதை ஒருக்கா மறந்து போடாதேயுங்கே. உவங்கள் உங்களை உசுப்பேத்தி விட்டுட்டு தாங்கள் தங்களின்ர கூத்தைகாட்டிக்கொண்டு திரியுறாங்க எண்டதை ஒருக்காலும் மறக்காதேயுங்கோ அரசாங்கத்தின்ர காசில செய்யுறு திட்டத்திற்கு வந்து உவன் பாவி ஒண்டுமே அரசாங்கம் செய்யாது எண்டு சொல்லுறான் எண்டால் உவங்க சுத்து மாத்து என்னெடு நீங்களே உணர்ந்து கொள்ளுங்கோவன். பிறகென்ன நான் போட்டு வரட்டே பிறகு சந்திப்போம் என்ன கண்ணுங்களா.... வாறேன்
இந்தக்கிழடனுக்கு இன்னும் டக்கிளசுட இங்கிலீசு தெரியலபோல. இப்படி அரசுக்கு நாலுபேர் பேசவேண்டும், அங்க நாலு பிரச்சினை இருக்கவேண்டும் அப்பதான் டக்களசுட வண்டி ஓடும். புலி ஏ9 வீதியை மூடாமல் இருந்திருந்தால் டக்கிளசுட தம்பியால பிளேன் , கப்பல் என்று ஓடி யாழ்பாணத்தாரின்ட முழுதையும் கறக்க முடிந்திருக்குமோ.
ReplyDelete