Thursday, February 9, 2012

சொத்துக்குவிப்பு வழக்ககுக்கு தனித்தனியாகச் சென்ற இணைபிரிந்த நண்பிகள்.

போட்டுக்கொடுப்பாரா சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்போது எப்போதும் முதல்வர் ஜெ., வுடன் வரும் சசிகலா இந்த முறை தனியாக வந்தார் எவ்வித பாதுகாப்பும், பந்தாவும் இல்லாமல், சாதாரணமாக கோர்ட்டுக்கு வரும் ஒரு குற்றவாளி போல வந்தார். விசாரணை துவங்கும்பட்சதில் ஜெ.,வுக்கு எதிராக எதுவும் கருத்து தெரிவிப்போரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 1991-96ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதில் ஜெ., சசிகலா, இளவரசி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் . சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெ., சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் வழக்கை தாமதிக்கும் நோக்கிற்கு ஒரு உதாரணமாக மாறிவிட மாட்டோம் என நீதிபதிகள் நிராகரித்தனர். இதனையடுத்து கடந்த அக்., மற்றும் ‌செப்., மாதங்களில் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்பு ஆஜரான ஜெ.,விடம் சுமார் 700 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இவருடன் சசிகால துணையாக வந்திருந்தார்.

ஆனால் கடந்த மாதம் இருவரும் பிரிந்து விட்டபடியால் சொத்து குவிப்பு வழக்கு பாதை எப்படி மாறுமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காரணம் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் பலரை தமிழக அரசு வழக்குகள் போட்டு சிறைக்குள் தள்ளியிருக்கிறது. ஒரே வழக்கில் குற்றவாளிகளாக ஜெ.,வும், சசியும் இருப்பதால் வழக்கில் சசிகலா தற்போது என்ன வாக்குமூலம் கொடுக்க போகிறார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கிடையில் கோர்ட்டில் தன்னிடம் தமிழில் கேள்விகள் கேட்டு பதிவு செய்ய வேண்டும் என சசி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது தள்ளுபடியாகி விட்டது. இருப்பினும் இவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். இதனால் இன்றைய விசாரணை நடக்கவில்லை. மீண்டும் வரும் 18 ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

பிளைட்டில் வந்த சசி தற்போது காரில்: வழக்கமாக இதற்கு முன்னதாக இந்த விசாரணைக்கு சசி , ஜெ.,வுடன் விமானத்தில் தான் வருவார். ஆனால் இந்த முறை காரில் வந்தார். அவருடன் எந்த கூட்டமும் வரவில்லை. கோர்ட் அறையில் இளவரசியும், சசியும் பேசிக்கொண்டிருந்தனர்.

அட்வகேட் ஜெனரல் பதவி விலகல் மர்மம் என்ன ? ; கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கிலும் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். ஆனால் இங்கு ஆளும் பா.ஜ,. அரசு ஆச்சார்யாவிற்கு பிரசர் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஆச்சார்யா 2 பதவிகளை வகிக்க கூடாது என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆச்சார்யா பெரிய அந்தஸ்து உள்ள அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பப்ளிக் பிராசிக்யூட்டராக நீடிக்கிறேன் என்றார். ஆச்சார்யா ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் திறம்பட வாதாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை சரிக்கட்ட அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com