கனடாவில் தஞ்சம் கோரி சென்றுள்ள 568 அகதிகள், கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆதாராகமாக ஓசியானிக் லேடி கப்பலில் சென்ற 76பேருள், ஒருவருக்கு மாத்திரமே அகதி அந்தஸ்த்து கிடைத்துள்ளதுடன் மற்றுமொருவர் நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளார். அத்துடன் சன் சீ கப்பலில் சென்ற 400க்கும் அதிகமான அகதிகளில் மூவருக்கு மாத்திரமே அதிக அந்தஸ்த்து கிடைத்துள்ளதுடன் ஏனையவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
இதற்கிடையில், இலங்கையில் இருந்து கனடா உட்பட ஜரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயரும் பலர் அங்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோககுவதாகவும் அவ்வாறு செல்பவர்களில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பின்றி இருப்பதாகவும் பெரும்பாலானவர்கள் தமது தகமையை விட குறைவான தொழில்களை செய்து வருவதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment