வேலையில்லா பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ள அதேநேரம், குறித்த விண்ணப்பங்களை மாவட்ட செயலகங்களில் பெற்றுக் கொள்ள முடியுமென பொது நிருவாக அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், வெற்றிடங்களுக்கான மாதிரி விண்ணப்பங்கள் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன.
அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளும் பட்;டதாரிகளுக்கு குறைந்தது 6 மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான பயிற்சியை வழங்குதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி காலத்தில் 6 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுமென பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரி.பி அபேகோண் தெரிவித்துள்ளார்.. பயிற்சியின் பின்னர் இப்பட்டதாரிகள் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
இதேநேரம் மாத்தளை மாவட்டத்தில் மேலும் 246 பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மாத்தளை ரத்தொட்ட, லக்கல, தபுள்ளை, தேர்தல் தொகுதிகளை சேர்ந்த 246 பட்டதாரிகளுக்கே அபிவிருத்தி உதவியாளர்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்க தலைமையில் மாத்தளை மாவட்ட செயலகத்தில் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் வசந்த பெரேராவும் இதில் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment