Monday, February 20, 2012

பஸ்ஸை விட மோட்டார் சைக்கிளில் பயணிப்பது இலாபமாகும் - கெமுணு விஜேரத்ன

போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளதை அடுத்து பஸ்ஸில் பயணம் செய்வதைவிட மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது இலாபமானதாகும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பினை அடுத்து பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .

நாங்கள் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்காக மகிழ்ச்சியடையமாட்டோம் . அப்படியாக இருந்தால் மக்கள் மாற்று நடவடிக்கை மேற்கொள்வார்கள் .ஒரு குடும்பத்தில் உள்ள கணவன் , மனைவி , பிள்ளை மூவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணம் செய்ய முடியும் .அவர்கள் பஸ்ஸில் பயணித்தால் மூவருக்கும் பயணச்சீட்டு வாங்க வேண்டி இருக்கும். .இதன்காரணமாக பஸ் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது இலாபமானது .

சிறிய ஒரு தொகையை செலுத்தியாவது லீசிங் முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை இன்று இலகுவாக வாங்க முடியும் .அது பெரிய பிரச்சினை அல்ல . முச்சக்கர வண்டி ஒன்றை வாங்கினாலும் இது போன்று நன்மை கிடைக்கும். முச்சக்கர வண்டியில் நான்கு அல்லது ஐந்து பேர் பயணம் செய்ய முடியும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment