எங்கள் மீது இஸ்ரேல் கைவைத்தால் அந்த நாடே இல்லாமல் போய் விடும்-ஈரான்
ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அகமது வஹிதி அளித்துள்ள ஒரு பேட்டியில், இஸ்ரேல் எங்களை தாக்கி அழித்து விடலாம் என்று கருதினால் அது தப்புக் கணக்காகி விடும். எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாடே இல்லாமல் போய் விடும். அந்த நாட்டை முழுமையாக அழித்து விடுவோம்.
எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாட்டை நிர்மூலமாக்கி விடுவோம். அதற்கான அத்தனை சக்தியும் எங்களிடம் உள்ளது என்றார் அவர். ஆனால் இஸ்ரேல் மீது என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்படும் என்பதை அகமது தெரிவிக்கவில்லை.
ஈரான் அமைச்சரின் பேச்சால் இப்பிராந்தியத்தில் நிலவி வரும் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
0 comments :
Post a Comment