யாழ் நிலவரங்களை நேரடியாக அறிந்து கொள்ளும்பொருட்டு இலங்கைக்கான கனேடிய தூதுவராலயத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் மார்க் கைநெஸ் குடாநாட்டிற்கு இன்று திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
யாழ் வந்த அவர் குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக பிரிகேடியர் சுமித் அத்தபத்துவுடன் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு பலாலி படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள்; பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கு இடையேயுள்ள உறவுகள், பொதுமக்களுக்கான வேலைத்திட்டங்கள் கண்ணிவெடியகற்றல், மாணவர்கள், மற்றும் விவசாயிகளுக்கான உதவிகள் தொடர்பாக விளக்கமளித்த பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நல்லுறவு காணப்படுவதாகவும் மார்க் கைநெஸ் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment