மனித உரிமை, ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரத்தை திணிக்க அமெரிக்கா முயற்சி
ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது
உலகின் பல்வேறு நாடுகளில் பலம் வாய்ந்த தலைவர்களாக விளங்கும் தலை வர்களை அவ்விடத்திலிருந்து அப்புறப் படுத் தும் சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளில் அமெரிக்கா போன்ற நாடுகள் ஈடுபட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மனித உரிமை, ஜனநாயகம் என்ற பேரில் சர்வாதிகாரத்தை திணிக்கவே அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா வானது, லிபியா, சிரியா ஆப் கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், தூனீஷியா, எகிப்து மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ள நிலையை இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ் சாட்டினார். இலங்கைக்கோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கோ இது போன்ற நிலைமையை உருவாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. கடந்த காலங்களில் நாம் சட்டத்தை சிறந்த முறையில் நிலை நாட்டியுள்ளோம். அதனை எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வோம்.
பொருளாதார, அரசியல், சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர். வெளிநாடுகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக உள்ளதுடன் எமது மக்கள் இதற்காக பூரணமாக ஒத்துழைக்க தயாராக உள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே கட்சி பேதங்களுக்கு அப்பால் சமாதானத்தையும், சுதந்திரத்தையும் அனுபவிக்கும் சகல தரப்பினரும் இதற்கு பூரணமாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment