சிலாபம் மற்றும் கம்பஹாவில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டங்களின் பின்னால் இருப்பது மக்கள் விடுதலை முன்னணியும் அரச சார்பற்ற நிறுவனங்களுமே என்று மீனி பிடித்துறை மற்றும் நீர்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார.
எரிபொருள் மானியம் தொடர்பாக தான் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், இதன்போது சிலாபம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் சமூகமளித்திருந்ததாகவும், அவர்கள் எரிபொருள் மானியத்தை பெற்றக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தாகவும் அமைச்சர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார் .
மீனவர்கள் வீதியில் வீதியில் இறங்கி போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தது பொலிஸார் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடமத்தியதனாலாகும் என்றும் அமைச்சர் மேலும் தொவித்தார் .
No comments:
Post a Comment