எனது கணவர் ஒரு போதும் வெளிநாட்டு சக்திகளுக்கு உதவி புரிந்து நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டார். அவர் போராட்டம் ஒன்றில் ஈடுபடுவதாக இருந்தால் அது நாட்டினுள் மேற்கொள்ளப்படும் போராட்டமாகவே இருக்கும் என்று அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனது கணவர் இராணுவத்தின் மேல் அன்பு வைத்துள்ளார். நாட்டு மக்கள் மீது அன்பு வைத்துள்ளார். முன்னாள் இராணுவ தளபதி என்ற வகையில் நாட்டிற்காக பிரஜை ஒருவர் செய்யக்கூடிய உயர்ந்த தியாகத்தை அவர் செய்துள்ளார் .
அநீதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக அவர் போராட்டத்தில் ஈடுபட்டால் அது நாட்டிற்குள் மாத்திரமே இருக்கும் .அது நிச்சயமாகும். நாட்டை காட்டிக்கொடுக்க யாராவது முயற்சி செய்தால், நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்தால் அதற்கெதிராக தனது உயிரை கூட அவர் பலியிட தயங்க மாட்டார் என்பது எனக்கு தெரியும்.
நாங்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் மாத்திரம் முறைப்பாடு (மகஜர்) செய்யவில்லை.சர்வதேச ரீதியில் மேற்கொள்ள வேண்டிய சகல முயற்சிகளையும் மேற்கொள்வோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று முன்னர் நாங்கள் நினைத்தது போல் தொடர்ந்தும் கருத கஸ்டமாக உள்ளது. அடுத்தது, இது போன்ற விடயங்களில் சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்வது இதற்கு முன்னரும் நடந்துள்ளது என்று அனோமா பொன்சேகா ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
Hehehehehe
ReplyDelete