பணம் அறவிடும் சமாதான நீதவான்களின் பதவி பறிக்கப்படும்
ஆவனங்களை உறுதிப்படுத்துவதற்காக மக்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளும் சமாதான நீதவான்களின் பதவி இரத்துச் செய்யப்படும் என்று நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
சத்தியக்கடதாசி மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்காக வரும் பொது மக்களிடமிருந்து சில சமாதான நீதவான்கள் பணம் அறவிடுவதாக தகவல்கள் கிடைததுள்ளதாகவும் , கௌரவ பதவியாக கருதப்படும் சமாதான நீதவான் பதவிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்து கொள்ளும் சமாதான நீதவான்கள் தொடர்பில் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவர்களின் சமாதான நீதவான் பதவி இரத்து செய்யப்படும் என்று நீதி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment