நீர்கொழும்பு மீனவர்களின் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது
கடந்த 13 ஆம் திகதி முதல் கடற்றொழில் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த நீர்கொழும்பு மீனவர்கள் இன்று பிற்பகல் தமது எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட தீர்மானித்தனர்.
சிறிய ரக படகுகளில் சென்று மீன் பிடித்தலில் ஈடுபடும் நீர்கொழும்பு மீனவர்களுக்கு நாளை முதல் 25 ரூபா விலை குறைக்கப்பட்டு 81 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படும் எனவும், மீனவ கூட்டுறவு சங்கங்களின் எரிபொருள் விற்னை நிலையங்கள் ஊடாக அதனை நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இன்று அரசாங்க அமைச்சர்களினால் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, கடற் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்ற தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக, நீர்கொழும்பு கடற்கரை வீதி மற்றும் குடாபாடுவ ஐக்கிய மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன மற்றும் மேல் மாகாண மீன்பிடித் துறை அமைச்சர் நிமல் லன்சா ஆகியோருடன் இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கடற்கரை வீதி மற்றும் குடாபாடுவ ஐக்கிய மீனவர் சங்கத்தின் பிரதி நிதி ஒருவர் தெரிவித்தார்.
இந்த கலந்துறையாடல் நீர்கொழும்பு மாநகர சபையில் இடம் பெற்றது.
ஜனாதிபதியின் ஆலோனையின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதற்கான சுற்று நிருபத்தை தயாரித்துள்ளதாக அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment