Thursday, February 23, 2012

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அநேக நாடுகள் ஆதரவாம்.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையில் எல்ரிரிஈ அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்கள் சில இலங்கைக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளபோதும் இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்குவதாக அநேக நாடுகள் உறுதியளித்துள்ளதாகவும் இலங்கைக்கு எதிராக செயற்படவுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட விதம் தொடர்பாக பகிரங்கப்படுத்துவதற்கு அரசின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர் எனவும் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

மேற்படி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான பிரமுகர்கள், நேற்று அதிகாலை ஜெனீவாவிற்கு புறப்பட்டு சென்றனர். 19 வது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வு சுவிஸர்லாந்தில் நடைபெறவுள்ளது.  அமைச்சர்களான ஜி.எல் பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இலங்கை குழுவில் இடம்பெறுகின்றனர்.
 
இங்கிருந்து புறப்படுமுன்னர் கருத்து தெரிவித்த அமைச்சர் சிறிபால டீ சில்வா சமாதானத்தை வென்றெடுப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் பொறுப்புடன் ஆரம்பித்துள்ளது. இலங்கை பயங்கரவாதத்தை அழிப்பதில் வெற்றி கொண்ட நாடு என்பதை மட்டுமல்லாமல், நமது நாட்டில் அனைத்து இன மக்களையும் இணைத்துக் கொண்டு சமாதானத்தை வென்றெடுக்கும் நாடு என்பதை நாங்கள் சர்வதேசத்திற்கு உணர்த்துவோம். எமக்கு எதிராக எந்தவொரு நாடாவது பிரேரனைகளை முன்வைத்தால், இந்நாடுகளின் நோக்கம் இலங்கையின் மனித உரிமை மீறல்களை மேம்படுத்துவது அல்லவொன்பதையும் இறைமையுள்ள இலங்கையில் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்னெடுப்பதே இந்நாடுகளின் நோக்கமெனவும் நாங்கள் தெளிவுப்படுத்துவோம். இறைமையுள்ள நாடு என்ற ரீதியில் இதனை அனுமதிக்க மாட்டோம்;. இதற்கு நாங்கள் அடிப்பணியவும் மாட்டோம். ஜனாதிபதி தலைமையில் நாங்கள் இம்முயற்சிகள் அனைத்தையும் முறியடிப்போம் என்பதை அரசின் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com