அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் சுட்டுக்கொலை.
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் பலசரக்கு கடை நடத்தி வந்தவர், சுக்ரித் தாஸ் (வயது 48). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். நேற்று இரவு அவர் தனது கடையை மூடிக்கொண்டு இருந்த போது சிலர் அங்கு வந்து அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். பின்னர் அவரது கடையிலும், அதையொட்டி உள்ள மற்றொரு கடையிலும், ஒரு வீட்டிலும் இருந்த விலை உயர்ந்த பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். ஏற்கெனவே சுக்ரித் தாசின் கடையில் இரு முறை கொள்ளை நடந்து இருக்கிறது. இந்த கொலை-கொள்ளை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments :
Post a Comment