இலங்கையின் சகல மாகணங்களிலும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்படுவர் என அரசாங்கம் தெளிவாக தெரிவித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் இருந்து மிக விரைவில் சிறிலங்காப் படைகள் அகற்றப்பட்டு விடும் என்று சென்னையிலிருந்து வந்திருந்த இந்திய ஊடகவியலாளர்களிடம் கதை விட்டிருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா.
'வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம் எனக் கூறியுள்ள டக்ளஸ் எஞ்சியுள்ள படையினரை வெளியேற்ற மாதங்கள் தேவைப்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் , பத்தில் இரண்டு பகுதிகள் தான் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தப் பகுதிகளில் இருந்தும் சிறிலங்கா இராணுவம் விரைவில் அகற்றப்படும்' என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
அதேவேளை, 'இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து நான் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது.
சிறிலங்காவின் எந்தப் பகுதியிலும் கடுமையான பாதுகாப்பு நடைமுறையில் இல்லை. ஆனாலும் இராணுவ முகாம்கள் உள்ளன.
இராணுவத்தைக் குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். விரைவில் குறைக்கப்படும். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்.
இராணுவத்தினரால் இங்கு ஏதாவது இடையூறு நேர்ந்திருந்தால், நீங்கள் என்னை கேளுங்கள். நான் கண்களை மூடிக்கொண்டு இருக்கமாட்டேன்.' என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புலிகளின் அழிவுக்கு பின்னர் வட கிழக்கில் ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டனர். அரசுடன் இணைந்துள்ள தமிழ்; குழுக்கள் மத்தியில் டக்ளஸ் பலமானவராக இருந்தாலும், வட இராணுவத் தலைமையகம் ஈபிடிபி யினரின் வன்செயல்களுகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில் இராணுவம் இங்கிருந்து வெளியேறினால், தன்னுடைய பெடியளை வைத்து சாதித்து விடுவேன் என்று டக்ளஸ் நெருக்கமானவர்ளிடம் பல தடவைகளில் தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் இராணுவத்தினர் தமக்கு பாதுகாப்பாக உள்ளனர் என்றே கருதுகின்றனர்.
சிறிலங்கா அரசில் டக்கிளசு ஒரு கீழ்மட்ட தொழிலாளி, அதற்காக தமிழர்கள் எல்லாம் அவரின் கீழ் என்று நினைப்பது மிகப் பெரிய தவறு. அடிப்படையில் யாழில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்க முடியாதவர் எப்படிஅடுத்த கட்டத்தை பற்றி கதைக்க முடியும்? கோமாளி வேடத்தை விட்டு தன்மானத்துடன் வாழ்வதே சிறந்தது.
ReplyDelete