“கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக் குழுவும் எரிபொருள் விலையேற்றமும்” கருத்தரங்கு
“கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக் குழுவும் எரிபொருள் விலையேற்றமும் என்ற தொனிப்பொருளில்” பகிரங்க கருத்தரங்கொன்று இன்று சனிக்கிழமை (25) நீர்கொழும்பில் நடைபெற்றது.
சுதந்திரத்துக்கான அரங்கம் அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நீர்கொழும்பு தம்மிட்ட கார்தினல் குரே நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஜயலத் ஜயவர்ன , ஜோசப் மைக்கல் பெரேரா , ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன , சுதந்திரத்துக்கான அரங்கம் அமைப்பின் முக்கியஸ்தர்களான பிரிட்டோ பெர்னாந்து , சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன,பிரடி கமகே மற்றும் சட்டத்தரணி கே.டப்ளியூ ஜனரஞ்சன, தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் ஹேர்மன் குரேரா ஆகியோர் உரையாற்றினர்.
பிரபல சிங்கள பாடகர் ஜயதிலக பண்டார மனித உரிமை தொடர்பான பாடல்களை அங்கு பாடினார்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment