Tuesday, February 7, 2012

தொடரும் சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்வுகள். (படங்கள் இணைப்பு)

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு இன்று இடம்பெற்றது. அபிவிருத்திக்குழுவும் சீ.ஐ.எம்.ஸ். கெம்பெசும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட நிகழ்வு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ரீ.எம்.இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது அபிவிருத்திக்குழுவும் சீ.ஐ.எம்.ஸ்.கெம்பெசின் மாணவர்களும் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர்களும் சேர்ந்து சிரமதானத்தை மேற்கொள்வதனைக் காணலம்.

( யு.கே.காலித்தீன்)





இதேநேரம் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தேசியக் கொடியேற்றுவதையும்; தேசிய கீதம் இசைத்த அல்மர்ஜான் மாணவிகளுக்கு பரிசு வழங்குவதையும், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.அசீஸ்மெய்டீன் உரையாற்றுவதையும் வீதியில் சென்ற அனைவருக்கும் இனிப்பு வழங்குவதையும் கலந்துகொண்ட கல்வி அதிகாரிகளையும் படங்களில் காணலாம்.





படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா.

No comments:

Post a Comment