Monday, February 20, 2012

களுவாஞ்சிக்குடி பிரதேச அபிவிருத்தி சபை கருணா தலைமையில்!

களுவாஞ்சிக்குடி பிரதேச அபிவிருத்திப் பணிகளை, துரிதமாக மேற்கொள்ள, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 10 கோடி ரூபாவிற்கான அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இப்பிரிவிற்கென, திவிநெகும, கமநெகும திட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும், ஆராயப்பட்டதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் சூறையடி 44 வீடமைப்பு திட்டம், 153 வெள்ள நிவாரண வீடமைப்பு திட்டம் பற்றியும், இங்கு ஆராயப்பட்டது.

45 கிராம சேவகர் பிரிவில் தலா 10 லட்சம் ரூபா செலவில், ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற ரீதியில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அமுல்ப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு, திட்டமிடல் தொடர்பாகவும், இங்கு ஆராயப்பட்டது.  

களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், பிரதேச செயலாளர் சுதாகரன் உட்பட திணைக்கள தலைவர்கள்,அரசசார்பற்றி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





No comments:

Post a Comment