கொலை வெறிப்பாடல் மூலம் நாடு, இனம், மதம், என்று பாராமல் அனைத்து தர ரசிகர்களையும் கொலைவெறியுடன் அலைய வைத்த பிரபல நடிகர் தனூஷ், இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்காருக்காக புதிய பாடலொன்றை பாடியுள்ளார்.
த்ரீ படத்தின் மூலம் "வை திஸ் கொலைவெறி" பாடல் மூலம், தனூஷ், இந்தியா உட்பட உலகம் முழுவதும் பிரபலமானார். இதனையடுத்து சச்சின் டெண்டுல்காருக்காக அவர் எல்பமொன்றை தயாரித்துள்ளார். கிரிக்கட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் சச்சின் டெண்டுல்கார், இந்தியாவின் பிரபல கம்பனியொன்றுக்காக விளம்பர தூதுவராக 25 ஆண்டுகளாக செயற்பட்டு வருகிறார். இதனை கொண்டாடும் வகையில், தனூஷிடம் எல்பமொன்றை தயாரிக்கும் பொறுப்பை, அந்நிறுவனம் வழங்கியிருந்தது. இந்த பாடலுக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இடம்பெற்றது. தனூஷூடன், பிரபல நடிகை அனுஷ்காவும் இடம்பெறுகிறார்.
No comments:
Post a Comment